பணம் காசு கொடுத்துதான் உதவி செய்ய வேண்டும் என்பது இல்லை. ஒரு மனிதனின் மனச் சிக்கல்களை அவிழ்த்து விடுவதும் ஓர் உதவிதான். ஏழை மாணவர்களுக்கு இலவசமாகப் பாடம் சொல்லித் தருவதும் ஓர் உதவிதான். முதியோர் இல்லத்திற்குப் போய் அவர்களிடம் ஒரு மணி நேரம் பேசிவிட்டு வருவதும் ஓர் உதவிதான். கருணை இல்லங்களுக்குச் சென்று பிஞ்சு நெஞ்சங்களில் நனைந்துவிட்டு வருவதும் ஓர் உதவிதான்.
ஆனால், அதே சமயத்தில் பத்து வெள்ளிக்கு, படுக்க ஒரு பாய் வாங்கிக் கொடுத்துவிட்டு, அதைப் பத்து கம்பத்திற்கு தண்டோரா போடுவதில் சந்தோஷம் வராது.
வள்ளல் ரெங்கசாமியின் பிள்ளைகளுக்கும், அதே மாதிரியான தார்மீகக் கொள்கை. அவர்களின் இரத்தத்தில் இன்னும் கலந்து ஓடுகிறது. இந்தோனேசியாவைச் சுனாமி உலக்கிய போது, ரேனா துரைசிங்கம் தன்னுடைய உணவு விடுதிகளுக்கு ஓர் உடனடிக் கட்டளையைப் பிறப்பித்தார்.
‘எவ்வளவு உணவு தயாரிக்க முடியுமோ அவ்வளவையும் உடனடியாகத் தயார்ப் படுத்துங்கள். உயிருக்குப் போராடும் அவர்கள்தான் இப்போதைக்கு நமக்கு முக்கியம்’ என்றார். ஆயிரக் கணக்கான உணவுப் பொட்டலங்கள், ஒரு சில வாரங்களுக்கு ஹெலிகாப்டர் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டன. ஏறக்குறைய பத்து இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள உணவுப் பொட்டலங்கள்.
வள்ளல் ரெங்கசாமியின் பிள்ளைகளுக்கும், அதே மாதிரியான தார்மீகக் கொள்கை. அவர்களின் இரத்தத்தில் இன்னும் கலந்து ஓடுகிறது. இந்தோனேசியாவைச் சுனாமி உலக்கிய போது, ரேனா துரைசிங்கம் தன்னுடைய உணவு விடுதிகளுக்கு ஓர் உடனடிக் கட்டளையைப் பிறப்பித்தார்.
No comments:
Post a Comment