இந்தியாவில் அம்பானி என்பது ஒரு பெரிய கோடீஸ்வரக் குடும்பம். அவர்களுடன்
2008ஆம் ஆண்டு ரேனா துரைசிங்கம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து
Big Cinemas Lotus Five Star எனும் ஒரு கூட்டுக் குழுவையும் உருவாக்கினார். இந்தக் குழுமம் இந்திப் படங்களைத் தயாரித்து வருகிறது.
 |
பிரிக்பீல்ட்ஸ் தங்கும் விடுதி |
ஒரு நிறுவனத்தை வெற்றிகரமான நிலையில் நீடித்து வைத்து இருக்க வேண்டும் என்றால், ஓர் அடிப்படைத் தத்துவத்தைப் பின்பற்ற வேண்டும். அதற்குப் பெயர் ‘பல்வகைப்படுத்துதல். ஆங்கிலத்தில்
Diversify என்று சொல்வார்கள். ஒரு நிறுவனத்தில் இருக்கின்ற ஒரு துறையில் சரிவு என்றால் இன்னொரு துறை, சரிந்து போகும் துறையைத் தூக்கிவிடும். ஆக, இந்தப் பல்வகைப்படுத்தும் தத்துவத்தின் கீழ் லோட்டஸ் குழுமமும் இறங்கியது.
 |
லோட்டஸ் தங்கும் விடுதி லிட்டல் இந்தியா |
2002ஆம் ஆண்டில் ஓட்டல் தொழில்துறையிலும் கால் பதித்தது. கோலாலம்பூர் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் இருந்த மதுரா இன், காவ்லூன் ஓட்டல் ஆகிய இரண்டையும் கொள்முதல் செய்தது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து மேடான் துங்குவில் 90 அறைகள் கொண்ட
Lotus Family Hotel எனும் தங்கும் விடுதியைக் கட்டியது. இதுதான் அவர்களின் முதல் விடுதி.
 |
லோட்டஸ் திரையரங்க உணவகம் |
தலைநகர் பிரிக்பீல்ட்ஸ், ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான், மஜீத் இந்தியா போன்ற இடங்களில் அவர்களுடைய தங்கும் விடுதிகள் உள்ளன. சராசரி குடும்பத்தினர் வசதிக்கு ஏற்றவாறு வாடகைக் கட்டணங்களும் மலிவாக உள்ளன. ஈப்போ, சித்தியவான், கூச்சிங் போன்ற இடங்களில் மேலும் சில தங்கும் விடுதிகள் கட்டப்படவிருக்கின்றன.
No comments:
Post a Comment