Showing posts with label பத்து பெரிங்கி. Show all posts
Showing posts with label பத்து பெரிங்கி. Show all posts

Thursday, September 20, 2012

சீனர்களிடம் வியாபாரம் - 5

த்து பெரிங்கிச் சீனர்களிடம் மீன்களை விற்றனர். அவர்களின் தொடர்புகளை வலிமைப் படுத்திக் கொண்டனர். வியாபார நுணுக்கங்கள் விசாலம் அடைந்தன. விற்பனைத் தந்திரங்கள், மந்திரங்களைப் பாடின. இதற்கு எல்லாம் தூண்டுகோலாக இருந்தவர் அவருடைய தந்தையார் ரெங்கசாமி பிள்ளை.


வெற்றிக் களிப்பில் ரேனா துரைசிங்கம்

சொந்த வியாபாரத்தைத் தொடங்கிப் பாருங்கள். வாழ்க்கையில் முன்னேறுங்கள் என்கின்ற ஆர்வத்தை மேலும் மேலும் உசுப்பி விட்டவர்கள், இந்தப் பத்து பெரிங்கி சீனர்களே. அவர்களுக்கு முதலில் நன்றி சொல்வோம். இல்லை என்றால் நமக்கு ரேனா சகோதரர்களைப் போல நல்ல தார்மீகச் சிந்தனைகளைக் கொண்ட மனிதர்கள் கிடைத்து இருக்கமாட்டார்கள்.

பினாங்கு பத்து பெரிங்கியில் - 1

1981 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம். பினாங்கு பத்து பெரிங்கியில் ஒரு சின்ன நிகழ்ச்சி. மூன்று சகோதரர்கள். வாங்கிச் சாப்பிடக் கொடுக்கும் காசைச் சேர்த்து வைக்கின்றனர். ஆளுக்கு ஒரு 500 வெள்ளி சேர்ந்துவிட்டது. என்ன செய்வது. ஒரு சின்ன ஒட்டுக் கடையைத் திறக்கிறார்கள். அங்கே சின்னச் சின்னப் பானைகள். அதிலே அம்மா செய்த சமையல் சாதனங்கள். ஒரு குட்டி வியாபாரம் எட்டிப் பார்க்கிறது. காசு இல்லாதவர்களுக்கு கடன். கை ஏந்துபவர்களுக்கு இலவசம்.


பெர்லிஸ் சுல்தான் அவர்களுக்கு சிறப்பு விருந்து

அதே அந்த ஒட்டுக்கடை, எதிர்காலத்தில் உலகத் தரம் வாய்ந்த ஐந்து நட்சத்திர ஓட்டலாக மாறும்; அந்தச் சகோதரர்கள் தமிழ்த் திரையுலகில் கால் பதிப்பார்கள்; சொந்தப் படங்களைத் தயாரிப்பார்கள்; சினிமா தியேட்டர்களைக் கட்டுவார்கள்; மலேசியாவில் கம்பளம் விரிப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. ஆனால், புன்னகை பூக்கும் அந்த அழகிய ஆண்டவனுக்கு மட்டும் தெரியும்.