தந்தையார் இறந்த பிறகு ரேனாவின் குடும்பம், 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம், கோலாலம்பூருக்குப் புலம் பெயர்ந்தது. ஜாலான் மாஸ்ஜீத் இந்தியாவில், ஓர் உணவகத்தைத் திறந்தார்கள். அதன் பெயர் ஜெய விலாஸ். அதுதான் லோட்டஸ் குழுமத்தின் தெய்வீகச் சுழி. முதல் உணவு விடுதி.
அடுத்து, 1990இல் லோட்டஸ் குடும்ப உணவகம், பெட்டாலிங் ஜெயா ஜாலான் காசிங்கில் திறக்கப்பட்டது. அதன்பிறகு, கிள்ளான் பள்ளத்தாக்கில் படிப்படியாக 15 உணவகங்கள் திறக்கப்பட்டன. பின்னர், காசிங் ஸ்டோர்ஸ் எனும் பெயரில் ஒரு நவீனமான சூப்பர் மார்க்கெட்டைத் திறந்தார்கள்.
1993இல் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனமான சோனி, தன்னுடைய தொலைக்காட்சிப் பெட்டிகளை விற்பனை செய்வதற்கு, லோட்டஸ் குழுமத்திற்கு உரிமம் வழங்கியது. அதன் பிறகு, ரேனா சகோதரர்களுக்கு எல்லாமே ஏறுமுகம்தான்.

No comments:
Post a Comment