Showing posts with label லோட்டஸ் குழுமம். Show all posts
Showing posts with label லோட்டஸ் குழுமம். Show all posts

Tuesday, October 2, 2012

ஜெய விலாஸ் - 13


ந்தையார் இறந்த பிறகு ரேனாவின் குடும்பம், 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம், கோலாலம்பூருக்குப் புலம் பெயர்ந்தது. ஜாலான் மாஸ்ஜீத் இந்தியாவில், ஓர் உணவகத்தைத் திறந்தார்கள். அதன் பெயர் ஜெய விலாஸ். அதுதான் லோட்டஸ் குழுமத்தின் தெய்வீகச் சுழி. முதல் உணவு விடுதி.

அடுத்து, 1990இல் லோட்டஸ் குடும்ப உணவகம், பெட்டாலிங் ஜெயா ஜாலான் காசிங்கில் திறக்கப்பட்டது. அதன்பிறகு, கிள்ளான் பள்ளத்தாக்கில் படிப்படியாக 15 உணவகங்கள் திறக்கப்பட்டன. பின்னர், காசிங் ஸ்டோர்ஸ் எனும் பெயரில் ஒரு நவீனமான சூப்பர் மார்க்கெட்டைத் திறந்தார்கள்.

1993இல் உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனமான சோனி, தன்னுடைய தொலைக்காட்சிப் பெட்டிகளை விற்பனை செய்வதற்கு, லோட்டஸ் குழுமத்திற்கு உரிமம் வழங்கியது. அதன் பிறகு, ரேனா சகோதரர்களுக்கு எல்லாமே ஏறுமுகம்தான்.

ரேனா பிள்ளை மணிமண்டபம் - 12


ந்தியாவில் உடலுறுப்பு ஊனமுற்றவர்களுக்கு என்று ஒரு கருணை இல்லத்தையும் ரேனா சகோதரர்கள் நடத்தி வருகின்றனர். அதில் இப்பொது 100 குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

'எங்கள் தந்தையார் என்ன செய்தாரோ அதைத்தான் நாங்களும் செய்கிறோம். சமுதாயத்திற்கு எங்கள் குடும்பம் எப்போதும் கடமைப்பட்டு இருக்கிறது. நாங்கள் சம்பாதிப்பதில், ஒரு பங்கை அந்தச் சமுதாயத்திற்கே மீண்டும் கொடுக்க விரும்புகிறோம். உதவி என்பது ஒரு சுழற்சி’ என்கிறார் ரேனா துரைசிங்கம்.

இன்னும் ஒன்றை இங்கே சொல்ல வேண்டும். தமிழ்நாடு, திருப்பத்தூரில் ஒரு திருமண மண்டபத்தையும் உருவாக்கி இருக்கிறார்கள். உள்ளூர் மக்களின் தேவைகளுக்காக அந்த மண்டபம் பயன்படுகிறது. அதன் பெயர் வள்ளல் ரேனா பிள்ளை மணிமண்டபம். லோட்டஸ் குழுமத்தின் பெயரில் இயங்கி வருகிறது.