Showing posts with label ராமலிங்கம். Show all posts
Showing posts with label ராமலிங்கம். Show all posts

Thursday, September 20, 2012

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் - 3

த்தோ ரேனா துரைசிங்கம் எப்படி உழைப்பால் உயர்ந்தார். இந்தியாவின் அனில் அம்பானியுடன் இணைந்து 'லோட்டஸ் பிக் சினிமா' என்ற நிறுவனத்தை எவ்வாறு நடத்துகிறார். அவருடைய வெற்றித் தத்துவங்களைப் பார்ப்போம். பகிர்ந்து கொள்வோம்.


சுத்தமான உணவகத்திற்கான விருது

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்று சொல்வார்கள். அதைப் போல இவருக்குப் பின்னால், இரு பெரும் தூண்கள் நிற்கின்றன. அந்தத் தூண்கள்தான் ராமலிங்கம்-நாகசுந்தரம். ரேனாவின் தம்பிகள். இருவரும் ரேனாவின் ஒவ்வொரு நகர்வுக்கும், காவல் தெய்வங்களாக நின்று காத்து வருகின்றனர். உண்மையிலேயே ரேனா கொடுத்து வைத்தவர்.

ராமலிங்கம் - நாகசுந்தரம் - 2

பினாங்கு, பத்து பெரிங்கியில், சின்ன ஒரு சாப்பாட்டுக் கடையைத் திறந்து, இன்று உலகம் போற்றும் உன்னதக் கலசங்களாக வலம் வருபவர்கள் யார்? அவர்கள் தான் அமரர் ரெங்கசாமியின் வாரிசுகள். சகோதர ஒற்றுமைக்கு வலிமை சேர்க்கும் துரைசிங்கம்-ராமலிங்கம்-நாகசுந்தரம் சகோதரர்கள். மலேசியப் புகழ் லோட்டஸ் ஜாம்பவான்கள். இனம், மொழி, சமய பேதங்களைத் தாண்டியவர்கள். தர்ம தார்மீகத்திற்குச் சிலை வடிக்கும் மண்ணின் மைந்தர்கள். 




மூத்தவர் துரைசிங்கம். ரேனா என்பது செல்லப் பெயர். அதுவே ’கார்ப்ரெட்’ பெயராக நிலைத்துவிட்டது. ரேனாவின் அரிய பெரிய அர்ப்பணிப்புகளும் ஆடம்பரம் இல்லாத எளிய வாழ்க்கையும், மலேசிய வரலாற்றில் சொப்பனம் பாடுகின்றன. இன்று ரேனாவிற்கு 20 உணவகங்கள், 2,400 தனி அறைகளைக் கொண்ட நட்சத்திர விடுதிகள். குழந்தைகளுக்கான ஓர் உல்லாச உலகம். 120 திரை அரங்குகள். 10,000 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகள்.இன்னும் நிறைய வருகின்றன.