ரேனா துரைசிங்கமும் அவருடைய சகோதரர்களும் தோட்டத் துண்டாடல்களினால் பாதிக்கப்பட்ட எண்ணற்ற இந்திய குடும்பங்களுக்கு, வீடுகள் கட்டிக் கொள்ள நிலங்களை அன்பளிப்பு செய்துள்ளார்கள். தெலுக் இந்தானில் இருந்த சீன, தமிழ்ப் பள்ளிகளுக்கும் சில ஏக்கர் நிலங்களை அன்பளிப்பு செய்து இருக்கிறார்கள்.
மலேசியாவில் இவரைத் தவிர, வேறு யாராவது இந்த மாதிரி மெர்டேக்கா பரிசுகளைக் கொடுத்து பெருமைப்பட்டு இருப்பார்களா. தெரியவில்லை. விளக்குப் போட்டுத்தான் தேட வேண்டும். ரெங்கசாமி பிள்ளை 1986 ஆம் ஆண்டு, தன்னுடைய 68-வது வயதில் அமரர் ஆனார்.
![]() |
ரேனா தன் தாயார் பார்வதி அம்மாள் அவர்களுடன் |
மலேசியாவில் இவரைத் தவிர, வேறு யாராவது இந்த மாதிரி மெர்டேக்கா பரிசுகளைக் கொடுத்து பெருமைப்பட்டு இருப்பார்களா. தெரியவில்லை. விளக்குப் போட்டுத்தான் தேட வேண்டும். ரெங்கசாமி பிள்ளை 1986 ஆம் ஆண்டு, தன்னுடைய 68-வது வயதில் அமரர் ஆனார்.
![]() |
லோட்டஸ் நிறுவனம் வெளியீடு செய்துள்ள தமிழ்ப்படங்கள் |
இங்கே ஒரு சின்ன இடைச்செருகல். நாம் சம்பாதிக்கும் பணத்தில், கொஞ்சமாவது மற்றவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். அதில் அவர்கள் அடையும் சந்தோஷத்தைப் பார்த்து நாமும் சந்தோஷம் அடைய வேண்டும். அதுதான் உண்மையான சந்தோஷம். இப்படிச் சொல்கிறவர் உலுகிந்தா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் விரிவுரையாளர் சிவநேசன்.
எப்போது பார்த்தாலும் யாருக்காவது, எதையாவது, எப்படியாவது உதவி செய்து கொண்டே இருக்கும் ஒரு நல்ல மனம் படைத்தவர். அமைதியின் சிகரம். தமிழ்மொழிக்கு கிடைத்த ஓர் ஆழ்கடல்.
No comments:
Post a Comment