1960களில் மலாயா பல்கலைக்கழகத்தின்
தமிழ்ப்பகுதியில் பயின்ற 15 மாணவர்களுக்கு ரெங்கசாமி பிள்ளை நிதியுதவிகளைச் செய்துள்ளார்.
அதாவது உபகாரச் சம்பளம். அவர்களில் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ கே.பத்மநாபன், மலாயா
பல்கலைக்கழகத் தமிழ்ப்பகுதியின் முன்னாள் தலைவர் டாக்டர் ராம சுப்பையா போன்றவர்கள்
குறிப்பிடத் தக்கவர்கள்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால்
சில கோடிகளைத் தாண்டும். ஆக, அவரை வள்ளல் என்று சொல்லலாமா. வேண்டாமா. நீங்களே சொல்லுங்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா. ஐம்பது
ஆண்டுகளுக்கு முன்னால், நடந்த ஒரு நிகழ்ச்சி. மெர்டேக்கா தினத்தில், புக்கிட் மெர்தாஜாமில்
இருந்த 30 இந்திய, மலாய்க்காரக் குடும்பங்களுக்கு, அமரர் ரெங்கசாமி பிள்ளை மெர்டேக்கா
பரிசுகளை வழங்கினார்.
![]() |
ரேனா தம் துணைவியாருடன் |
என்ன பரிசு தெரியுமா. ஒரு குடும்பத்திற்கு ஓர் ஏக்கர் நிலம்.
அப்போது அந்த நிலத்தின் மதிப்பு 20,000 ரிங்கிட். இப்போது அதன் மதிப்பு ஒரு மில்லியன்
ரிங்கிட். அதாவது 10 இலட்சம். மொத்தத்தில் மூன்று கோடி. தானமாக கொடுத்து இருக்கிறார்.
No comments:
Post a Comment