Thursday, September 20, 2012

அயராத உழைப்பு தளராத முயற்சி - 4

ரேனாவின் தாரக மந்திரம் Honest, Helpful and Honour. தமிழில் உண்மையாக இரு; உதவியாக இரு; உயர்வாக இரு என்று அவரே சொல்கிறார். ரேனா பினாங்கில் பிறந்தவர். செயிண்ட் சேவியர் பள்ளியில் பயின்றவர். சின்ன வயதிலேயே அயராத உழைப்பு, தளராத முயற்சி, தீராத சுறுசுறுப்பு. ரேனா சகோதரர்களின் உடல் ஊன்களில் ஊறிப் போன உண்மைச் சாந்துகள்.


துணைப் பிரதமருடன் விருந்து நிகழ்ச்சி

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே, வீட்டின் பின்னால் சும்மா கிடந்த நிலத்தைக் கொத்திப் பயிர் செய்தனர். குளம், குட்டைகளில் மீன் பிடித்தனர். கடலில் வலைகளை வீசினர். சந்தைகளைத் தேடிப் போய் காய்கறிகளை விற்றுக் காசு பார்த்தனர்.

No comments:

Post a Comment