1981 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம். பினாங்கு
பத்து பெரிங்கியில் ஒரு சின்ன நிகழ்ச்சி. மூன்று சகோதரர்கள். வாங்கிச் சாப்பிடக் கொடுக்கும்
காசைச் சேர்த்து வைக்கின்றனர். ஆளுக்கு ஒரு 500 வெள்ளி சேர்ந்துவிட்டது. என்ன செய்வது.
ஒரு சின்ன ஒட்டுக் கடையைத் திறக்கிறார்கள். அங்கே சின்னச் சின்னப் பானைகள். அதிலே அம்மா
செய்த சமையல் சாதனங்கள். ஒரு குட்டி வியாபாரம் எட்டிப் பார்க்கிறது. காசு இல்லாதவர்களுக்கு
கடன். கை ஏந்துபவர்களுக்கு இலவசம்.
அதே அந்த ஒட்டுக்கடை, எதிர்காலத்தில்
உலகத் தரம் வாய்ந்த ஐந்து நட்சத்திர ஓட்டலாக மாறும்; அந்தச் சகோதரர்கள் தமிழ்த் திரையுலகில்
கால் பதிப்பார்கள்; சொந்தப் படங்களைத் தயாரிப்பார்கள்; சினிமா தியேட்டர்களைக் கட்டுவார்கள்;
மலேசியாவில் கம்பளம் விரிப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. ஆனால், புன்னகை பூக்கும்
அந்த அழகிய ஆண்டவனுக்கு மட்டும் தெரியும்.
No comments:
Post a Comment