Friday, September 21, 2012

மெர்டேக்கா பரிசுகள் - 9

1960களில் மலாயா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பகுதியில் பயின்ற 15 மாணவர்களுக்கு ரெங்கசாமி பிள்ளை நிதியுதவிகளைச் செய்துள்ளார். அதாவது உபகாரச் சம்பளம். அவர்களில் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ கே.பத்மநாபன், மலாயா பல்கலைக்கழகத் தமிழ்ப்பகுதியின் முன்னாள் தலைவர் டாக்டர் ராம சுப்பையா போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.


கூட்டிக் கழித்துப் பார்த்தால் சில கோடிகளைத் தாண்டும். ஆக, அவரை வள்ளல் என்று சொல்லலாமா. வேண்டாமா. நீங்களே சொல்லுங்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், நடந்த ஒரு நிகழ்ச்சி. மெர்டேக்கா தினத்தில், புக்கிட் மெர்தாஜாமில் இருந்த 30 இந்திய, மலாய்க்காரக் குடும்பங்களுக்கு, அமரர் ரெங்கசாமி பிள்ளை மெர்டேக்கா பரிசுகளை வழங்கினார். 

ரேனா தம் துணைவியாருடன்

என்ன பரிசு தெரியுமா. ஒரு குடும்பத்திற்கு ஓர் ஏக்கர் நிலம். அப்போது அந்த நிலத்தின் மதிப்பு 20,000 ரிங்கிட். இப்போது அதன் மதிப்பு ஒரு மில்லியன் ரிங்கிட். அதாவது 10 இலட்சம். மொத்தத்தில் மூன்று கோடி. தானமாக கொடுத்து இருக்கிறார்.

சான் மின் சீனப்பள்ளி - 8

வர் இனம், மொழி, சமயம், சம்பிரதாயம் என்று எதையும் பார்க்கவில்லை. பள்ளிக்கூடங்கள், சமயத் தளங்கள், சமூக மண்டபங்கள் போன்ற பொது அமைப்புகளுக்கு, இயன்ற அளவுக்கு நிலங்களைத் தானமாக வழங்கி இருக்கிறார். 

சான் மின் சீனப்பள்ளி திறப்புவிழாவில்

அந்த வகையில், தெலுக் இந்தான் சான் மின் சீனப்பள்ளிக்கு ஒரு நிலப்பகுதியை எழுதி வைத்தார். அதன் மதிப்பு இப்போது பத்து இலட்சம் ரிங்கிட். அதே இடத்தில் வேறு ஒரு பகுதியில், ஒரு பள்ளிவாசல், ஓர் ஆலயம், இந்தியர்களின் இடுகாடு கட்டப்பட வேண்டும் என்றும் அவர் உயில் எழுதிச் சென்றார். 2007 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி, சான் மின் சீனப்பள்ளியின் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. முன்னாள் துணைக் கல்வியமைச்சர் டத்தோ ஹோன் சுன் கிம் திறந்து வைத்தார்.

சான் மின் சீன இடைநிலைப்பள்ளி
"ஒரு சீனப்பள்ளிக்கு ஓர் இந்தியர் தன்னுடைய நிலத்தை அன்பளிப்பு செய்து இருக்கிறார். இதைக் கண்டு என் மனம் நெகிழ்ந்து போகிறது" என்றார் அமைச்சர். இந்த நிகழ்ச்சியில், ரெங்கசாமி பிள்ளையின் மனைவியும் ரேனா சகோதரர்களின் தாயாருமான ரேனா பார்வதியும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.

 

வள்ளல் ரெங்கசாமி பிள்ளை - 7

சிக்கனமான வாழ்க்கை. சிறப்பான அணுகு முறைகள். வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்தார். பங்குச் சந்தையில் ஈடுபட்டு கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்தார். காலப் போக்கில் தெலுக் இந்தானில் சின்னச் சின்ன நிலங்களை வாங்கினார். அப்படியே செல்வந்தரானார்.


2008 ஆம் ஆண்டு உணவக உரிமையாளர்
சங்கக் கூட்டத்தில் டத்தோ ராமலிங்கம்

 
பணம் இருப்பவனிடம் குணம் இருக்காது என்பது ஒரு பொதுவான கருத்து. ஆனால், ரெங்கசாமி பிள்ளை அதற்கு எல்லாம் விதிவிலக்கு. அவர் ஒரு கொடை வள்ளல். அப்படிச் சொல்வதில் தப்பு இல்லை என்று நினைக்கிறேன். ஏன் என்றால், கிடைத்தைக் குறைத்துக் காட்டும் உலகில், கொடுத்ததை மறைத்துக் காட்டும் குணம் படைத்தவர் இந்த வள்ளல் ரெங்கசாமி பிள்ளை.

சீனத் தத்துவம் - 6

லாவோ சூ என்பவர் ஒரு சீன தத்துவஞானி. அவர் சொன்ன தத்துவம் ஒன்று இருக்கிறது. ஒரு மனிதனிடம் ஒரு மீனைக் கொடு. அது அவனுக்கு அன்றைக்கு ஒரு நாள் சாப்பாடு. ஆனால், அவனிடம் மீனைப் பிடிப்பதைக் கற்றுக் கொடு. அதுவே அவனுக்கு வாழ்க்கை பூராவும் சாப்பாடு. எப்பேர்ப்பட்ட தத்துவம். இது ரெங்கசாமி பிள்ளை தன் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்த உண்மைகள்.

பிரிமாஸ் ஆண்டுக்கூட்டத்தில்

ரெங்கசாமி பிள்ளை 1953ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் இருந்து மலாயாவிற்கு வந்தவர். முதலில் சாதாரண எடுபிடி வேலைகளைச் செய்தார். பின்னர், புக்கிட் மெர்தாஜாமில் இருந்த ஒரு வங்கியில் அலுவலகப் பையனாக வேலை. அதன் பின்னர், wholesale merchant மொத்த விற்பனை வணிகத் துறையில் காலடி வைத்தார். கடைசியில் real estate நில உடைமைத் துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

Thursday, September 20, 2012

சீனர்களிடம் வியாபாரம் - 5

த்து பெரிங்கிச் சீனர்களிடம் மீன்களை விற்றனர். அவர்களின் தொடர்புகளை வலிமைப் படுத்திக் கொண்டனர். வியாபார நுணுக்கங்கள் விசாலம் அடைந்தன. விற்பனைத் தந்திரங்கள், மந்திரங்களைப் பாடின. இதற்கு எல்லாம் தூண்டுகோலாக இருந்தவர் அவருடைய தந்தையார் ரெங்கசாமி பிள்ளை.


வெற்றிக் களிப்பில் ரேனா துரைசிங்கம்

சொந்த வியாபாரத்தைத் தொடங்கிப் பாருங்கள். வாழ்க்கையில் முன்னேறுங்கள் என்கின்ற ஆர்வத்தை மேலும் மேலும் உசுப்பி விட்டவர்கள், இந்தப் பத்து பெரிங்கி சீனர்களே. அவர்களுக்கு முதலில் நன்றி சொல்வோம். இல்லை என்றால் நமக்கு ரேனா சகோதரர்களைப் போல நல்ல தார்மீகச் சிந்தனைகளைக் கொண்ட மனிதர்கள் கிடைத்து இருக்கமாட்டார்கள்.